×

மன்னார்குடியில் மாநில அளவிலான பெண்கள் கோகோ போட்டி

மன்னார்குடி, பிப்.8: திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கோகோ கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கோகோ போட்டிகள் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சென்னை, கோவை, திருச்சி, கடலூர், திருவாரூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளாக நடந்தன. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டிகளில் திருச்சி, கடலூர், திருவாரூர், மதுரை அணிகள் விளையாடின. இதில் திருச்சி அணியும், கடலூர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் திருச்சி அணி, கடலூர் அணியை 15க்கு 10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் திருச்சி, 2ம் இடம் கடலூர், 3ம் இடம் திருவாரூர், 4ம் இடம் மதுரை என அணிகளுக்கு திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் ராஜ ராஜேந்திரன், மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.காமராஜ், தமிழ்நாடு கோகோ கழக இணைச்செயலாளர் கருப்பையா, பொதுச்செயலாளர் நெல்சன் சாமுவேல், செயற்குழு உறுப்பினர் அப்பாவு பாண்டியன், தரணி மெட்ரிக் பள்ளி இயக்குனர் இளையராஜா, வர்த்தக சங்க செயலாளர் அசோகன் ஆகியோர் பங்கேற்று கோப்பைகள், பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கோகோ கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். கோகோ போட்டியை திரளான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Tags : women ,coco competition ,Mannargudi ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது