வணிகரை தாக்கியதை கண்டித்து தஞ்சை மாரியம்மன் கோயிலில் கடையடைப்பு

தஞ்சை,பிப்.8: தஞ்சை மாரியம்மன்கோயில் கடைதெருவில் மாரியம்மன் கோயில் வணிகர் சங்க உறுப்பினர் கணேசன் என்பவர் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கணேசனின் கடைக்கு, இறைச்சி வாங்க வந்தவரிடம், அப்பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் சிலர் தகராறு செய்தாக கூறப்படுகிறது. இதனை கணேசன் மற்றும் இவரது தம்பி சரவணன் ஆகியோர் தட்டி கேட்டனர். தகராறு குறித்து தகவலறிந்து, மாரியம்மன்கோயில் வணிகர் சங்க தலைவர் அன்பு, செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் சென்று சமாதனம் செய்ய முயன்றனர். ஆனால் ராஜா மற்றும் சிலர் சேர்ந்து, அன்பு மற்றும் லாரன்ஸை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வணிகர் சங்க நிர்வாகிகளை தாக்கியதை கண்டித்து மாரியம்மன்கோயிலில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தாலுகா போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில், வணிகர் சங்க நிர்வாகிகளை, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில், தொடர் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories:

>