காணாமல் போன, பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டறிய புன்னகை தேடி வாகனம்

கும்பகோணம்,பிப்.8: கும்பகோணத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், மற்றும் கடை, பல நிறுவனங்களில் வேலை செய்யும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களை அரசு காப்பகங்களில் ஒப்படைத்து நல்வழிப்படுத்தி குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து புன்னகையை வர வைக்கும் நிகழ்வாக காவல்துறை, சமூக பாதுகாப்புதுறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் இணைந்து நடத்திய புன்னகையை தேடி என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி கயல்விழி கலந்து கொண்டார்.

பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கென்று மாவட்ட அளவில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள துறை சார்ந்த பணியாளர்கள் தெருவோரங்களில், கோயில்களில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை திடீர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு மீட்டு பெற்றோர் அல்லது குழந்தைகள் இல்லத்தில் மறு வாழ்வுக்காக சேர்க்கப்படுவார்கள்.

கடந்த 2ம் தேதியில் இருந்து நேற்று வரை தஞ்சை மாவட்டத்தில் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டனர் என்றார். அதனை தொடர்ந்து நடந்த இந்நிகழ்ச்சியில் புன்னகை தேடி என்ற வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், சைல்டு லைன் அலுவலர் பாத்திமாராஜ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ரவீந்திரன், பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி, காவல்துறை டிஎஸ்பிக்கள் பாலகிருஷ்ணன், அசோகன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>