×

எஸ்பி துவக்கி வைத்தார் தஞ்சை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி உதவி கோட்ட பொறியாளர் ஏற்றினார்

தஞ்சை,பிப்.8: தஞ்சை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ரயில்வே உவி கோட்ட பொறியாளர் ஷியாம் நாகர் ஏற்றினார். மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசிய கொடி பறக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன் கடந்த சில நாட்களுக்கு முன் கொடி கம்பம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு 100 உயரத்தில் 30.5 அடி அகலத்தில், 20 அடி நீளத்தில் தேசிய கொடி வடிவமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததையடுத்து நேற்று 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் ஷியாம் நாகர் கலந்து கொண்டு, தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த கம்பத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடி எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இரவு நேரங்களில் வண்ண விளக்குகள் ஒளிர விடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சாந்தி மற்றும் ரயில்வே போலீசார், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பலத்த மழை, புயல் காலங்களிலும், தலைவர்கள் இயற்கை அடைந்தாலோ, மத்திய அரசின் வழிமுறைகளின் படி முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : SP ,Assistant Divisional Engineer ,National Flag ,Tanjore Railway Station ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்