பேராவூரணி, பிப்.8: தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார். முகாமில் முட நீக்கு சாதனம், செயற்கை கால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான கிட், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி, தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சாதனங்கள் வழங்க, மருத்துவர்கள் சிவா, ராமசாமி, காமேஸ்வரி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்கினர். முகாமில் நலவாரியப் பதிவு, ஸ்மார்ட் அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.