×

அறந்தாங்கி உட்கோட்டத்தில் வரும் 20ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறுவது அவசியம்

அறந்தாங்கி, பிப். 8: அறந்தாங்கி உட்கோட்ட போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறந்தாங்கி உட்கோட்டத்தில் தற்போதுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குநிலை மற்றும் சில வகுப்புவாத சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புகள், தங்கள் எண்ணம்போல ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடுவது, மேலும் இதர சட்டத்துக்கு புறம்பான ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடுவது பொதுஅமைதிக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படுத்தும்.

எனவே பொது அமைதியை பேணிக்காக்கும் பொருட்டு மேற்காணும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியமாகும். சென்னை தமிழ்நாடு 1966ம் ஆண்டு 22ம் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள 1861ம் ஆண்டு காவல்துறை சட்டத்தில் 30(2)பிரிவின்கீழ் வழங்கியுள்ள அதிகாரங்களை கொண்டு அறந்தாங்கி உட்கோட்டத்தின் காவல் எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் நடத்த முயல்பவர்கள் அந்த நிகழ்வுகள் நடைபெறும் நாள், இடம், நேரம், வட்டம் மற்றும் அதுதொடர்பான விபரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு அந்தந்த பகுதிகளுக்கு அதிகார வரம்பு கொண்டுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பாக அனுமதி பெற விண்ணப்பித்து முறையான அனுமதி பெற வேண்டும். இந்த ஆணை சமய ஊர்வலங்கள், திருமண ஊர்வலங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது, இந்த ஆணை இன்று (அதாவது நேற்று) முதல் வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,Aranthangi ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்