செந்துறைக்கு 14ம்தேதி வருகை மு.க.ஸ்டாலினை வரவேற்பது குறித்து திமுகவினர் ஆலோசனை

அரியலூர், பிப்.8: அரியலூர் மாவட்டம் செந்துறை திமுக ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அரியலூர் வருகையை அடுத்து, செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் பேசுகையில், தேர்தல் பிரசார நிகழ்ச்சிக்கு வரும் 14ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரியலூர் வர உள்ளார். அவரை வரவேற்பதாகவும், நமது ஒன்றியத்தில் உள்ள சாலை வசதிகள், குடிநீர் பிரச்சினைகள், விதவை ஊனமுற்றோர் உதவி கிடைக்காமல் வரும் பொது மக்களின் குறைகள், தனிநபர் பிரச்னைகள் அனைத்தையும் மனுவாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் அதிகளவில் வர ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எழில்மாறன், காளமேகம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சிவபாஸ்கர், விக்னேஷ், கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆசாவீரன் குடிக்காடு தனியார் மகாலில் வடக்கு ஒன்றியம் சார்பில் ஞானமூர்த்தி தலைமையில்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Related Stories:

More