×

11ம் தேதி தைஅமாவாசை வேதை, கோடியக்கரை கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி

வேதாரண்யம், பிப்.8: வேதாரண்யத்தில் வருகிற 11ம்தேதி தைஅமாவாசையையொட்டி புனித நீராடலுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி புனித நீராட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரையில் ஆடி மற்றும் தைஅமாவாசையையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதிகொடுத்து, தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கூடுவார்கள். ஆனால் கொரோனா நோய்த் தொற்றுதடுப்பு காரணமாக தடைவிதிக்கப்பட்ட நாளிலிருந்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 11ம் தேதி தைஅமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடலுக்கு அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் முருகு தலைமை வகித்தார். கூட்டத்தில் காவல்துறை துணைகண்காணிப்பாளர் மகாதேவன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வேதாரண்யேஸ்வர் கோயில்செயல் அலுவலர் மணவழகன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தைஅமாவாசை அன்று தமிழகஅரசின் வழிகாட்டுதலின்படி கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் புனித நீராட தேவையான பாதுகாப்பு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், வேதாரண்யம்-கோடிக்கரைக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Tags : devotees ,beach ,Kodaikanal ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...