மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15ம்தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

மயிலாடுதுறை, பிப்.8: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகிற 15ம் தேதி வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செயயப்பட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாரின் வரும் 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரில் நடைபெறும் கூட்டத்தில் 5 தொகுதிகளுக்காக ஒரே இடத்தில் சிறப்புரையாற்றுகிறார். சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் உள்ள திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து மயிலாடுதுறை மாவட்டக் கழக பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமையில் மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனை கூடடம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், சத்தியசீலன், பன்னீர்செல்வம், ஜெகவீரபாண்டியன், அன்பழகன், அருட்செல்வன் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் நகர கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், மாவட்டக் கழக பொறுப்பாளர் நிவேதாமுருகன் பேசுகையில், தலைவர் வரும் நிகழ்ச்சிக்கு யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தை கூட்டவேண்டும். ‘ஸ்டாலின் தான் வர்ராறு விடியல் தரப்போராரு என்ற அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களை அதிக அளவில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பு நாம் அளிக்கவேண்டும் என்றார்.

Related Stories:

>