×

நாகை, மயிலாடுதுறையில் 6வது நாளாக மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் 33 பேர் கைது

நாகை, பிப்.8: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜிபிஎப் வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட 9 அம்ச சோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 18 பேரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்றும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், செவிலியர் ஊர்புற நுலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், காலிபணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும் என்பன பேன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 6வது நாளாக நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் இளவரசன் தலைமையில் மாநில அரசைக் கண்டித்து கோரிக்கைகளை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

Tags : servants ,Nagai ,Mayiladuthurai ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து