- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கரூர்
- தலைமைச் செயலாளர்
- திணைக்களம்
- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
- ஆர். ஜெயா
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்:
- பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு கலெக்டராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் சார் ஆட்சியர் கு.ரவிகுமார், கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திர சேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக நே.பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
