×

சீர்காழி அருகே குளம் ஆக்கிரமிப்பை மீட்டுத்தர கோரிக்கை

சீர்காழி, பிப்.8: சீர்காழி அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தரக்கோரி தாசில்தாருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் ஆச்சாள்புரம் ஊராட்சி கீழத்தெருவில் சர்வே எண் 215ல் அரசுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் அளவில் குளம் இருந்தது. இந்த குளத்து தண்ணீரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் குளத்தில் மழைநீர் தேங்கியதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. தற்போது அந்த குளத்தை தனிப்பட்ட நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குளம் குட்டையாக மாறியதால் குளத்தின் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் தடைப்பட்டுள்ளது. மேலும் குளத்தை ஒட்டி உள்ள சாலையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம், சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம், சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்