×

கட்டளை தென்கரையில் கரும்பு, நெற்பயிரை காப்பாற்ற மாயனூரில் தண்ணீர் திறக்க கோரி குளித்தலையில் நாளை ஆர்ப்பாட்டம்

குளித்தலை, பிப்.8: கட்டளை தென்கரை கேஎச்எல்சி-எஸ்பிசி பாசன வாய்க்காலில் காய்ந்து போன கரும்பு, வாழை பயிரை காப்பாற்ற மாயனூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரி குளித்தலை உட்கோட்ட ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நாளை (9ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. கரூர் மாவட்டம், கட்டளை தென்கரை கேஎச்எல்சி-எஸ்பிசி வாய்க்கால் பாசன விவசாய சங்க செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது. சங்கத் துணைத் தலைவர் சேட்டு தலைமை வகித்தார். செயலாளர் மருதூர் சம்பத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பருவமழை காலம் கடந்து பெய்த அடை மழையால் நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டு விவசாயம் பெரும் நஷ்டத்தை அடைந்தது. வாழை பயிர்களை காப்பாற்ற குச்சி போட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 மாதம் தண்ணீரில்லாமல் வயல்களில் ஈரப்பதம் தென்படாமல் காய்ந்து வெடித்துள்ள நிலையில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. ஒன்றரை லட்சம் செலவு செய்தும் வீணாக போகிறது. அதனால் இதற்கு தேவையான தண்ணீர் தற்போது மாயனூர் கதவணை போதிய அளவுக்கு இருந்து வருகிறது இதனால் உடனடியாக வாழை, கரும்பு பயிர்களை காப்பாற்ற கட்டளை தென்கரை வாய்க்காலில் தண்ணீர் மாயனூரில் இருந்து திறந்துவிடவேண்டும் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் விவசாயிகள் பெற்ற கடனை திரும்பச் செலுத்தி விட்டனர். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் பயிர் கடன் வழங்காத நிலையில் மீண்டும் அவர்களுக்கு புதிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, குளித்தலை உட்கோட்ட ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Kulithalai ,opening ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...