விவசாயிகள் சங்கம் முடிவு தோகைமலை மேற்கு, கிழக்கு ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்

தோகைமலை, பிப்.8: கரூர் மாவட்ட திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசாரத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (8ம் தேதி) பங்கேற்க உள்ளார். இதில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலின்படி தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பாக மாலை 6.30 மணிக்கு தோகைமலை பஸ் நிலையம் அருகிலும், கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக மாலை 7 மணிக்கு காவல்காரன்பட்டி பஸ் நிறுத்தம் அருகிலும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி தோகைமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே தோகைமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தோகைமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர், குளித்தலை எம்எல்ஏ ராமர் மற்றும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகிய இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories:

>