மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேலைவாய்ப்பு முகாம்: ஆவடி நாசர் பணி ஆணை வழங்கினார்

ஆவடி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எஸ்.எம்.நாசர் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஆவடி, சி.டி.எச் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மைதானத்தில்  இரு நாட்கள் நடந்தது. இந்த முகாமை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்து பணிக்களுக்கான ஆணையை வழங்கினார். முன்னதாக, அறக்கட்டளை நிர்வாகி அசீம்ராஜா அனைவரையும் வரவேற்றார். இதில்,  இந்தியாவின் தலைசிறந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் கலந்துகொண்டவர்களுக்கு, நிறுவனங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக பணிக்களுக்கான ஆணையையும் வழங்கினர். முகாமில், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி நிர்வாகி பூவை ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ம.ராஜி, ஆர்.திருமலை, ஆவடி மாநகர பொறுப்பாளர்கள் ஜி.நாராயணபிரசாத், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், பொன்.விஜயன், ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, பூவை ஜெயக்குமார், புஜ்ஜி.ராமகிருஷ்ணன், கோடுவள்ளி முரளி, பூவை ரவிக்குமார், காக்களூர் ஜெயசீலன், என்.இ.கே.மூர்த்தி, அணிகளின் அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், சிட்டிபாபு, பவுல், வக்கீல் மூர்த்தி, நாகூர்கனி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>