×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட் ரோடு அருகில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் வி.மாதேப்பள்ளி கூட் ரோடு அருகில், தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கம் இணைந்து, ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னபையன் வரவேற்றார். விவசாய சங்க மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், மாரப்பன், தொழிலாளர் சங்க மாநில துணை பொது செயலாளர் சலீம், மாவட்ட பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள மூன்று தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அதே பெயரில் அமைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து ஏராளமானோர் கொண்டனர்.

Tags : Union Government ,Krishnagiri ,Workers' Union ,Farmers' Union ,Union BJP government ,V.Mathepalli Good Road ,Krishnagiri district ,Veppanahalli, Krishnagiri district ,
× RELATED திமுக கொடி ஏற்றி வைத்த துணை முதல்வர்