×

திமுக அலுவலகம் திறப்பு

ஓசூர், பிப்.23: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு பகுதியில் திமுக அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து கட்சி துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் ேபசுகையில், மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை கோடை கால சிறப்பு தொகையுடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இலவச பேருந்து, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கிடைத்திட என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், நகர அவைத்தலைவர் செந்தில்குமார், மாநகர பொருளாளர் தியாகராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எல்லோர மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags : TIMUKA ,Hosur ,Dimuka ,Osur, Krishnagiri District ,Prakash ,MLA ,
× RELATED கர்நாடகாவில் இருந்து அரசு பஸ்சில்...