டென்னிஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் டென்னிஸ் சங்கம் மற்றும் பாரூக் சில்க் டிரேடர்ஸ் இணைந்து மாவட்ட அளவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் காஞ்சிபுரம், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஒற்றையர் பிரிவில் சாம்சன் முதல் பரிசையும், பாலமுருகன் இரண்டாம் பரிசையும், சதீஷ்கண்ணா மூன்றாம் பரிசையும் வென்றனர். மேலும் சதீஷ்கண்ணா சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரட்டையர் பிரிவில் பாலமுருகன், சாம்சன் ஜோடி முதல் பரிசையும், சுரேஷ், விக்னேஷ் ஜோடி இரண்டாம் பரிசையும், குணாளன், பாரூக் ஜோடி மூன்றாம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, வக்கீல் மதனகோபால் பரிசு வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் குணாளன், செயலாளர் அசோக் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>