‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் திரளான திமுக தொண்டர்கள் பங்கேற்பு

திருச்சுழி/அருப்புக்கோட்டை, பிப்.8: விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருச்சுழி தொகுதியில் இருந்து திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிவாசகன் தலைமையில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், உடையனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜா உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் நரிக்குடி ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், பொதுக்குழு உறுப்பினர் செம்பொன்நெருஞ்சி சந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் சேர்மன் சுந்தரி தங்கபாண்டியன், சிறுபான்மையினர் நல மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தெற்கு மாவட்ட பொருளாளர் பந்தல்குடி சாகுல்ஹமீது, இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர திமுக செயலாளர் மணி, மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், காரியாபட்டி பைனான்சியர் மணிகண்டன், வழக்கறிஞர் அணி விருதுநகர் விஜயராஜன், கண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சோலையப்பன், திமுக பிரமுகர் காந்திநகர் சீனிவாசப்பெருமாள், இளைஞரணி அழகுராமானுஜம், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திருப்பதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சீனிவாசன், சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், ராஜபாளையம் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், சாத்தூர் நகர செயலாளர் குருசாமி, சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணக்குமார், ஜெயபாண்டியன், ராஜபாளையம் ஒன்றியச்செயலாளர்கள் சரவணமுருகன், ஞானராஜ், திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம், சிவகாசி ஒன்றியச் செயலாளர் விவேகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>