ஆற்றில் மது விற்றவர் கைது

சாத்தூர், பிப்.8: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றில் வைத்து மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இருக்கன்குடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆற்றில் மது பாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜா(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>