×

விருதுநகர் மாவட்டம் முழுவதும் மேலும் 14 தாசில்தார்கள் மாற்றம்

திருவில்லிபுத்தூர், பிப்.8: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேற்று முன்தினம் 13 தாசில்தார்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது மேலும் 14 தாசில்தார்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் தனராஜ் அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராகவும், விருதுநகர் டாஸ்மார்க் கிடங்கு மேலாளர் மாதா விருதுநகர் டாஸ்மார்க் ஆய மேற்பார்வை அலுவலராகவும், விருதுநகர் டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலர் பாண்டி சங்கர்ராஜ் விருதுநகர் சிப்காட் நில எடுப்பு அழகு 2 தனி வட்டாட்சியராகவும், விருதுநகர் சிப்காட் நில எடுப்பு அழகு 2 தனி வட்டாட்சியர் பால் ரத்தினராஜ் திருவில்லிபுத்தூர் ஆதிதிராவிடர் நலன் தனி வட்டாட்சியராகவும், திருவில்லிபுத்தூர் ஆதிதிராவிட தனி வட்டாட்சியர் சரஸ்வதி விருதுநகர் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், விருதுநகர் தனி வட்டாட்சியர் குயிலி விருதுநகர் ஆதிதிராவிடர் நலன் தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் விருதுநகர் ஆதிதிராவிடர் நலன் தனி வட்டாட்சியர் ராமநாதன் திருவில்லிபுத்தூர் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும், திருச்சுழி தனி வட்டாட்சியர் ஷாஜகான் விருதுநகர் சிப்காட் நில எடுப்பு அழகு 4 தனி வட்டாட்சியராகவும், திருவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் வள்ளி விருதுநகர் நில எடுப்பு அழகு 1 தனி வட்டாட்சியராகவும், சிவகாசி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் உமா மகேஸ்வரி மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர் தனக்குமார் சிவகாசி கோட்ட கலால் அலுவலராகவும்,சிவகாசி கோட்ட கலால் அலுவலர் கிருஷ்ணவேணி அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலராகவும், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் சின்னத்துரை திருவில்லிபுத்தூர் நில எடுப்பு அழகு 3 தனி வட்டாட்சியராகவும், திருவில்லிபுத்தூர் நில எடுப்பு அழகு 3 தனி வட்டாட்சியர் மாரிமுத்து சிவகாசி நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து மொத்தம் 27 தாசில்தார்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Virudhunagar district ,
× RELATED முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் சேரலாம்