பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

விருதுநகர்/சிவகாசி, பிப்.8: விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், இளைஞரணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் இரா.கிருஷ்ணகுமார், மாணவரணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, திமுக இளைஞரணி அன்புசரவணன், பாண்டி, சங்கர் அஜித், சக்தி, முகமது பாசில், கிருஷ்ணமூர்த்தி, மார்நாடு, பாக்யராஜ், வெற்றிவேல், முருகப்பெருமாள், அன்புகண்ணன், நகர மாணவரணி அமைப்பாளர் நாகேந்திரன், நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் சபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகாசியில் இருந்து மாநில திமுக வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், விவேகன்ராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் அக்கினிவீர், பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம், விருதுநகர் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் தீலிபன் மஞ்சுநாத், விருதுநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கணேசன், சிவகாசி முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.ஏ.சந்திரன், முன்னாள் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.கந்தசாமி, திமுக பிரமுகர்கள் சன்சைன் கணேசன், திருத்தங்கல் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.உதயசூரியன், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மாணிக்கம், சிவகாசி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்கள் பிரவீன், அந்தோணி, வாடியூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரீஸ்வரன், 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, திருத்தங்கல் நகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சிவகாசி நகர பொறுப்பாளர் காளிராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெயில்ராஜ், முன்னாள் நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>