உள் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு

மதுரை, பிப். 8: அகில இந்திய பார்வர்டு பிளாக் (பசும்பொன்) மாநில தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் நவமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் காசிராஜன், செயலாளர் மணிகண்டன், உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நாடு முழுவதும் குற்றப்பழங்குடியினர் சட்டத்தால் பாதிப்பிற்குள்ளான டிஎன்டி மக்களை மாநில வாரியாக கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும். நீண்டகால கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உத்தரவிட்டும், தமிழக அரசு கணக்கெடுப்பை நடத்தவில்லை.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை தற்போது உள்ள இடஒதுக்கீடு நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாசின், வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட(எம்பிசி) மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>