மதுரையில் கனிமொழி எம்.பி இன்றும், நாளையும் பிரசாரம்

மதுரை, பிப். 8: திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இன்றும் (திங்கள்), நாளையும் (செவ்வாய்) மதுரையில் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணத்தை, கனிமொழி எம்.பி மேற்கொண்டு வருகிறார். மதுரை மேற்குத்தொகுதிக்குட்பட்ட ஜீவாநகரில் இன்று (திங்கள்) காலை 8.20 மணிக்கு பிரசாரத்தை துவக்கும் கனிமொழி, மகளிர் சுயஉதவிக்குழுவினர், அனைத்து சமுதாய நிர்வாகிகள், அப்பள தொழிற்சாலை தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

பின்னர் இரவு 7 மணியளவில் ஜீவாநகர் சந்திப்பு மூன்று போஸ்ட் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். ஏற்பாடுகளை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி செய்துள்ளார். 2ம் நாளான, நாளை (செவ்வாய்) மதுரை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத்தொகுதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். காலை 9 மணியளவில் செல்லூர் பகுதியில் பிரசாரத்தை துவக்கும் அவர், நெசவாளர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் முனிச்சாலை பகுதியில் நடைபெறும் வாகன பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் செய்துள்ளார்.

Related Stories:

>