திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அரசு வழிகாட்டுதல்படி திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

திண்டுக்கல், பிப். 8: திண்டுக்கல்லில் சிறப்பு பெற்ற மாசிமக திருவிழாவான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இது தொடர்பாக கோட்டை மாரியம்மன் கோயில் அரங்கத்தில் மண்டகப்படிதாரர்களிடம் அமைச்சர் சீனிவாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுபாஷினி, பரம்பரை அறங்காவலர்கள் பாலகுரு, கணேசன் சண்முகம் முத்தரசன், மகாலட்சுமி, கண்ணன் கமலநாதன், தலைமை பூசாரி குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது: திருவிழாவில் பக்தர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய் பழம் உடைத்து அபிஷேகம் செய்வது, பூக்குழி, மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது. தீ சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது அனைத்தும் அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும். வரும் பிப்.11ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரம், பிப்.12ம் தேதி பூச்சொரிதல் விழாவும், பிப்.14ம் தேதி சாட்டுதலும், 16ம் தேதி கொடியேற்றமும், 27ம் தேதி தசாவதாரமும் மார்ச் 1ம் தேதி கொடி இறக்கமும், மார்ச் 2ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். விழாக்கள் கொரோனா காலத்தில் நடைபெறுவதால் பக்தர்கள் ஒத்துழைப்புடன் திருவிழா சிறப்பாக நடைபெற உதவ வேண்டும்.

மேலும், மண்டகப்படிக்கு தாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் கலெக்டர் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், அங்குகிங்கு இசைக்குழு தலைவர் செல்லமுத்தையா, தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் மங்கலம், அபிராமி கூட்டுறவு தலைவர் பாரதிமுருகன், ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்மோகன் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>