×

இடைசெவலில் குடிநீர் நிலையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கோவில்பட்டி, பிப்.8: கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். கோவில்பட்டி பயணியர் விடுதி முன் மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதன்பிறகு கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சௌந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன் மற்றும் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, வேலுமணி, ராசையா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், ஆர்டிஓ சங்கரநாராயணன், தாசில்தார் மணிகண்டன், பிடிஓ சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kadampur Raju ,drinking water station ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்