வைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் நலத்திட்ட உதவி

வைகுண்டம், பிப்.8: வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேம்பலாபாத், கடையனோடை, தேமாங்குளம், பால்குளம், திருப்புளியங்குடி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், மூலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்று 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ‘ மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது பாஜ மற்றும் அதிமுக அரசுகளால் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் மூலமே இத்தகைய அவலநிலைகளுக்கு தீர்வு கிடைக்கும்’ என்றார். விழாவில் காங்கிரஸ் மாநில செயலாளர் சிந்தியா வைலட் லில்லி, வைகுண்டம் வட்டாரத்தலைவர் நல்லகண்ணு, மாவட்ட செயலாளர் தோழப்பன்பண்ணை சீனி ராஜேந்திரன், வட்டார செயலாளர் கருப்பசாமி, ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதண்டராமன், வட்டார பொருளாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்காரபாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் இசைசங்கர், செய்தி தொடர்பாளர் மரியாஜ் வைகுண்டம் நகர செயலாளர் சித்திரை, காங்கிரஸ் நிர்வாகிகள் பிரபாகரன், ஜெயக்கொடி, சிங்காரவேலன் மற்றும் திமுக தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தோழப்பன்பண்ணை மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>