பர்கிட்மாநகர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நாங்குநேரி ரூபி மனோகரன் வழங்கினார்

நெல்லை, பிப். 8: பாளை பர்கிட்மாநகர் கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நாங்குநேரி ரூபி மனோகரன் வழங்கினார்.தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் நாங்குநேரி தொகுதி, பாளை. வடக்கு வட்டாரம் நடுவக்குறிச்சி பஞ்சாயத்து பர்கிட்மாநகருக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து உரையாடினார். அப்பகுதி இளைஞர்கள் போட்டிகளில் பங்கு ெபற்று சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்,  கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் உபகரணங்கள் வழங்கினார். பின்னர் இளைஞர்களோடும், சிறுவர்களோடும், கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இதில் பாளை. வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் குளோரிந்தால், மீரான், தங்கசாமி, வக்கீல் சிங்கராஜா, பர்கிட்மாநகர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர்கள், என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>