வீரகனூர் கொள்ளையில் திணறும் போலீசார்

கெங்கவல்லி பிப்.8: வீரகனூர் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபன், குமரன் ஆகியோரது வீடுகளில் கடந்த 3ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 40 பவுன் நகை மற்றும் ₹2.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வீரகனூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், எந்தவித துப்பும் கடைக்காமல் திணறி வருகின்றனர். இதேபோல், நாமக்கல், ஸ்ரீரங்கம், செஞ்சி, மதுரை, வாழப்பாடி,  கள்ளக்குறிச்சி, திண்டிவனம், திருக்கோயில், உடுமலைப்பேட்டை, பல்லடம்,  சிவகாசி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.  அதில், தொடர்புடையவர்களுக்கு வீரகனூர் கொள்ளை சம்பவத்தில்  தொடர்பிருக்கலாமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>