×

தொழிலில் ஒற்றுமை ஏற்படக்கோரி ரிக் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

நாமக்கல், பிப்.8: நாமக்கல்லில், தொழிலில் ஒற்றுமை ஏற்படக்கோரி, ரிக் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு அடிக்கு 12 வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், சுமார் 7 ஆயிரம் ரிக் லாரிகள் உள்ளன. இவை தமிழகம், ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், பீகார் என பல்வேறு மாநிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுகிறது. டீசல் விலை தொடர் உயர்வால், ரிக் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ₹1.75 கோடி செலவில் ரிக் வாகனங்ளை வாங்கி தொழில் செய்யும் உரிமையார்கள், அதற்கு போதுமான லாபம் கிடைப்பதில்லை என கூறி வருகிறார்கள்.

டீசல் விலை உயர்வு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க தற்போது பெறப்படும் கட்டணத்தை உயர்த்துவது போன்றவற்றை தீர்வுகாணும் வகையில், நாமக்கல்லில் நேற்று 2வது நாளாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல், ஆயில் மற்றும் மூலப் பொட்களின் விலை உயர்வை கண்டித்து, இந்த பேராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் பைபாஸ் இணைப்பு சாலையில், ரிக் உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ரிக் லாரிகள் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க, ஒரு அடிக்கு ₹75 வரை கட்டணமாக பெறப்படுகிறது. டீசல் விலை உயர்ந்துள்ளதால், அடிக்கு ₹12 வரை உயர்த்தி ₹87 கட்டணம் வாங்க ரிக் லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இற்கான ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ரிக் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘டீசல் விலை உயர்வை குறைக்க கோரி, மத்திய அரசிடம் முறையிட்டால் எதுவும் நடக்க போவதில்லை. அதனால் தொழிலில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில், ரிக் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து ஆழ்துளை போட, கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொழிலில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொரு உரிமையாளரும் தங்களது இஸ்டத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்க கட்டணம் வாங்குகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வுகாணவே, தொடர்ந்து ரிக் லாரிகளை நிறுத்தி வைத்து ஆலோசித்து வருகிறோம்,’ என்றனர்.

Tags : Rick Larry ,owners ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு