×

மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

திருப்பூர், பிப். 8: திருப்பூர்  தி.மு.க. மத்திய மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு மாநகரத்தில், காந்தி நகர்  பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற  தலைப்பில் மாற்று கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைபவர்களை வரவேற்கும்  விழா நடந்தது. அ.தி.மு.க, பா.ஜ., இந்து முன்னணி, விசுவ ஹிந்து  பரிசத், ரஜினி மக்கள் மன்றம், தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளில்  இருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளர்  தினேஷ்குமார் ஏற்பாட்டில், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க முன்னாள்  எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய மாவட்ட அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி  நிர்வாகிகள், மேங்கோ பழனிசாமி, ராமதாஸ், குளோபல் பூபதி, தி.மு.க மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜ்,  பி.ஆர் செந்தில் குமார், பொறுப்பு குழு உறுப்பினர் செந்தூர் முத்து, முத்து  சரவணன், முன்னாள் வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். புதிதாக இணைந்த அவர்களுக்கு தி.மு.க.வின் வண்ணத்துண்டு  அணிவிக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Tags : Alternative parties ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி