×

பத்து மாதங்களுக்கு பிறகு 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவக்கம் பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வர அறிவுறுத்தல்

ஊட்டி,பிப்.8: நீலகிரி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டிருந்தது. பொங்கலுக்கு பிறகு கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு குறித்து அரசு தெரிவித்துள்ள அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே 9,11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ., என 218 பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மொத்தம் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு இன்று முதல்  கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசரூதீன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 9,11 வகுப்புகளுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்குகின்றன. பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்து பெற்றோர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்து மாணவ, மாணவிகள் பள்ளியில் சமர்பிக்க வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும், என்றார்.

Tags : classes ,parents ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார்...