தவறுதலாக வெடித்த கைத்துப்பாக்கி போலீஸ் விசாரணை

கோத்தகிரி,பிப்.8: கோத்தகிரி அருகே இந்து அமைப்பின் நிர்வாகிக்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒருவரின் கைத்துப்பாக்கியிலிருந்து  தவறுதலாக தோட்டா வெடித்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஒருவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவருக்கு செந்தலை பெருமாள் என்ற காவலர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி செந்தலை பெருமாள் தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக, கை துப்பாக்கி வெடித்து அதிலிருந்து தோட்டா வெளியேறியது. இதில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து செந்தலை பெருமாள் நேற்று மாலை சோலூர் மட்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>