×

18 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடி மீட்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் சுமார் 18 ஏக்கர் தரிசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உத்திரமேரூர் வட்டாட்சியருக்கு புகார்கள் வந்தன.அதன்பேரில் வட்டாட்சியர் உமா தலைமையில் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 18 ஏக்கர் தரிசு நிலத்தை வேலி அமைத்து ஆக்கிரமித்தது தெரிந்தது.இதையடுத்து, வருவாய்துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அப்பகுதியில், அரசு சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post 18 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Uttaramerur District Collector ,Tirupulivanam ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...