×

விண்வெளி பூங்கா அமைக்க திட்டம்? இஸ்ரோ தலைவருடன், கலெக்டர் சந்திப்பு

நாகர்கோவில்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(இஸ்ரோ) தலைவர் சிவன், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் உள்ள வீடு மற்றும் கோயில்களுக்கு வந்திருந்தார். நேற்றும் அவர் நாகர்கோவிலில்  தான் இருந்தார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகைக்கு சிவன் வந்து இருந்தார். அவரை மாவட்ட கலெக்டர் அரவிந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதியும் உடன் இருந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது.

குமரி மாவட்டத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், இந்த விண்வெளி பூங்கா அமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரோ தலைவர் சிவன், சொந்த மாவட்டத்தில் விண்வெளி பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்தது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Collector ,space park ,ISRO ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...