×

மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் மருத்துவ சங்கத்தினர் பைக் பேரணி

கோவில்பட்டி, பிப்.5: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மருத்துவ சங்கத்தினர் கடந்த பிப்.1 முதல்  14ம்தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை  தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக குமரியில் இருந்து சென்னை வரை இருசக்கர தொடர் வாகன பேரணி தொடங்கியது. 4வது நாளான நேற்று நெல்லையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் 25 பேர் பேரணியாக வந்தனர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நிறைவு பெற்ற இப்பேரணிக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய மருத்துவர் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளர் டாக்டர் பத்மாவதி, பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள், முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டாக்டர் மோசஸ்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Kovilpatti ,Medical Association Bike Rally ,Central Government ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...