தோட்டத்தில் ஆடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம்,பிப்.5: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்ப தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவரது மனைவி கண்ணகி (40). இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஜோதிராமலிங்கத்திற்கும்(59). இடப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜோதிராமலிங்கத்தின் வெள்ளாடு கண்ணகி தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதைதட்டிக் கேட்ட கண்ணகியை தகாத வார்த்தையால் திட்டி ஜோதிராமலிங்கம் தாக்கியுள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கண்ணகி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்கு பதிந்து ஜோதிராமலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories:

>