×

செங்குந்தபுரத்தில் கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், பிப்.5: ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கால பைரவருக்கு தைமாத தேய்பிறை அஷ்டமியில் 5ம் ஆண்டு முளைப்பாரி பூஜை விழா நடைபெற்றது. காலபைரவர் கோயில் கடந்த 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் மாலையில் சிறப்பு அபிஷேக பூஜை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிவனின் புருவத்தில் இருந்து தோன்றியவர் காலபைரவர். இவரை வழிபட முன்வினை நீங்கி, திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோகம், குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்னை, கல்வியில் மேன்மை, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன் முளைப்பாரி எடுப்பதற்கு பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டி அவர்களே நாற்றுவிட்டு தினந்தோறும் 108 ஸ்தோத்திரங்கள் சொல்லி 11 நாட்கள் அதனை படித்து மாலை மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரிகையை எடுத்து பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை செய்து முடித்து காலபைரவர் கோவில் அருகில் உள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை விட்டு வழிபாடு செய்தனர் இவ் வழிபாட்டிற்கான ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டான்மைகாரர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags : Devotees ,Sengunthapuram ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...