×

நாகையில் 3வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல் 60 பெண்கள் உட்பட 80 பேர் கைது

நாகை, பிப். 5: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 3வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 60 பெண்கள் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 3வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ், மாவட்ட துணைத்தலைவர் புகழேந்தி, அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அப்போது மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது