×

கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கோடியக்கரை சரணாலயம் திறப்பு

வேதாரண்யம், பிப். 5: கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் கடந்த 2ம் தேதி  மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு மான், குதிரை, நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயத்தை பார்ப்பதற்காக நாள்தோறும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வு காரணமாக அரசு வழிமுறைகளை பின்பற்றி 10 மாதத்துக்கு பிறகு மீண்டும் கடந்த 2ம் தேதி பார்வையாளர்களுக்காக கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறந்து விடப்பட்டுள்ளது. சரணாலயத்தை நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதி திறந்து வைத்தார். சுற்றுலா பயணிகள் சென்று பார்ப்பதற்கு 10 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டிகளை எடுத்து கொண்டு சுற்றுலா பயணிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kodiakkar Sanctuary ,spread ,
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை