×

சீர்காழியில் குடிநீர் பைப்பில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு

சீர்காழி, பிப். 5: தினகரன் செய்தி எதிரொலியால் சீர்காழியில் குடிநீர் பைப் உடைப்பு சரி செய்யப்பட்டது. சீர்காழி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. இதனால் குடிநீர் பைப்பில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் சீர்காழி நகராட்சி நிர்வாகம் சார்பில் உடைந்த குடிநீர் பைப் சரி செய்யப்பட்டது. இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...