நாங்கூரில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு

சீர்காழி, பிப். 5: சீர்காழி அருகே நாங்கூரில் நாராயணபெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுலாத்துறை நிதி ரூ.60 லட்சத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியையொட்டி மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் பங்கேற்று இனிப்பு வழங்கினார். செயல் அலுவலர் குணசேகரன், ஆய்வாளர்கள் கண்ணதாசன், ஹரிகிருஷ்ணன், மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>