மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

சீர்காழி, பிப். 5: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை உபகரணங்கள், காதொலி கருவி, ரொலேட்டர் தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முட நீக்க வல்லுனர் ரூபன் ஸ்மித் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ராஜமாணிக்கம், நற்குணன், சிவகுமார், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>