ஆர்.எஸ்.பாரதி பேச்சு கரூரில் மண்டல அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

கரூர், பிப்.5: கரூரில் மண்டல அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் நியூட்ரீசன் இண்டர்நேஷனல் இணைந்து கரூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு திருச்சி மாவட்ட நியமன அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட நியமன அலுவலர் சசிரேகா வரவேற்றார். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் அருண், திட்ட மேலாளர் சையத் அகமது, உப்பு ஆலோசகர் சரவணன் மற்றும் ரமேஷ், திருநாவுக்கரசு, சொக்கலிங்கம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின் புதிய வழிகாட்டல்கள், உப்பு உற்பத்தி, விற்பனை, கண்காணிப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, புதிய மாற்றங்கள் குறித்தும் இந்த பயிற்சி முகாம் உதவும் என்ற வகையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>