நெல்லை ஆர்டிஓ அலுவலகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை, பிப். 5:  நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் சாலை விபத்துகளில் முதலுதவி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 32வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பாளை. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் மோட்டார் வாகனங்களில் தீத்தடுப்பு மற்றும் சாலை விபத்துகளின்போது முதலுதவி மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தீ செயலி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார ேபாக்குவரத்து அலுவலர், போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற வந்திருந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>