×

தொழிலதிபர் போஸ்பாண்டியன் இல்ல திருமண வரவேற்பு விழா

நெல்லை, பிப். 5:  நெல்லை தொழிலதிபர் போஸ்பாண்டியன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நெல்லை தொழிலதிபர் புருஷோத்தமன் என்ற போஸ் பாண்டியன்- சொர்ணலதா தம்பதியினரின் மகன் சபரிநாத் போஸ், மேலக்கடையநல்லூர் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் காளிராஜ்-செல்வராணி தம்பதியினரின் மகள் சண்முகப்பிரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பாளை கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெற்றது.  விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் ஆறுமுக பாண்டியன்,

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், டிபிஎம்.மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, ஆ.க.மணி, அருண்குமார், அமமுக மாவட்ட செயலாளர் பரமசிவஐயப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீரான்மைதீன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை தச்சை பகுதி திமுக செயலாளர் தச்சை சுப்பிரமணியன், ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், மணமகனின் சகோதரர் நவீன் போஸ் மற்றும் இருவீட்டார் வரவேற்றனர்.

Tags : Entrepreneur ,Pospondian Home Wedding Reception ,
× RELATED சன் டிவி குழும தலைவர் கலாநிதி...