×

பாளை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு

நெல்லை, பிப். 5:  பாளை வட்டார விவசாயிகள் பயிர் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாளை வட்டாரத்தில் நெற்பயிரில் குருத்து பூச்சி மற்றும் குலைநோய் ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை தடுக்க நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் வழிகாட்டுதலின் பேரில் பாளை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி மற்றும் துறை அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வயல் ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் வயல்களில் மஞ்சள் மற்றும் பழுப்புநிறம் கலந்த அந்துபூச்சிகள் பறப்பது தென்பட்டால் நோய்க்கான அறிகுறியாகும்.

இளம்புழுக்கள் தண்டுபகுதி மற்றும் நடுகுருத்தின் உள் சென்று தாக்குதல் ஏற்படுத்தும். கதிர்கள் வரும்போது காய்ந்து வெண்கதிராக, சாவியாக மாறிவிடும். இதனால் மகசூல் இழப்பும் ஏற்படும். இந்நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த டிரைக்கோ கிரம்மா என்னும் ஒட்டுண்ணி அட்ைட கட்டுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் நடவு செய்வதற்கு முன்பாக நாற்றுகளின் நுனியினை கிள்ளி எடுத்து அழிப்பதன் மூலம் முட்டை குவியலை அழிக்கலாம்.
குலைநோய் தாக்கப்பட்ட நெற்பயிரில் இலைகளில் கண் வடிவ புள்ளிகள் காணப்படும். வெற்றிலை சாறு உமிழ்ந்தது போன்றும் காணப்படும். ஆரம்ப நிலையில் இந்நோயை கட்டுப்படுத்த டிரைசைக்ளோசோல் மற்றும் அசாஸ்ரோபின் மருந்தினை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : palm region ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு