×

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள் 3ம் நாளாக சாலை மறியல்

திருப்பூர், பிப்.5: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 3ம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநில செயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும்.ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 17.பி குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 180  பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம், அரசு ஊழியர்கள் தொடர் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு  போராட்டங்கள் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Government employees ,cancellation ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்