×

கொரோனா தடுப்பூசி போட 10 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

திருப்பூர், பிப்.5:திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட 10 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் பல லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று இந்தியாவில் குறைய தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இருந்து முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் டி.எஸ்.கே. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அரசு வழிகாட்டுதலின் படி மாவட்டம் முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதற்கிடையே, 100 பணியாளர்களுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் தங்களது பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்டம் முழுவதும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி தேவைப்படும் மருத்துவமனைகள் சுகாதாரத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : hospitals ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...