திருப்பூரில் 17 பேருக்கு கொரோனா

திருப்பூர், பிப்.5: திருப்பூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,983ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 221 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 17,555பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>